Diabetic சர்க்கரை நோயிலிருந்து விடுதலை

நாட்டில் உள்ள எண்ணற்ற “சக்கரை ஆராய்ச்சி மையங்கள்”, “சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்கள்”,”கணைய சிறப்பு நிபுணர்கள் அனைவரும் உங்களிடம் சொல்லியே தீர வேண்டிய உண்மை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒருவேளை அவர்கள் இந்த உண்மையை உங்களிடம் சொல்லவே இல்லை என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதையாவது நீங்கள் சுயமாக சிந்திக்க வேண்டுகிறேன்.

சர்க்கரை நோயை அலோபதி மருந்துகள் தீர்க்காது என்பதை அலோபதி மருத்துவர்கள் மிகுந்த பெருமிதத்துடனும் சற்றே  அறிவித்துக் கொள்கிறார்கள்.

ஆனாலும், அந்த நோய்க்கென பட்டியல் பட்டியலாக பல மருந்துகளை அவர்கள் எழுதிக் குவிக்கிறார்கள்.

அந்த மருந்துகளில் ஒன்று பயோக்ளைடோசோன் (pioglitazone). 

இந்த மருந்தினை சில வருடங்களுக்கு முன்பு 18 /7/2013 இந்திய சுகாதார அமைச்சகம் தடை செய்தது

இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு பின் வரும் அபாயங்கள் நேரிடும் என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது தான் காரணம். அந்த அபாயங்கள்;

1, இதயக் கோளாறுகள்.
2, சிறுநீர்ப்பை புற்றுநோய்.
3, உடல் பருமன் அதிகரித்தல்.

இதைத் தவிர வேறு பல நோய்களும் அறிவிக்கப்பட்டன.
இந்த பயோக்ளைடோசோன் மருந்தினை, ஏற்கனவே சில நாடுகள் தடை செய்துள்ளன. சில நாடுகள் நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க அரசு பயோக்ளைடோசோன் மருந்து”மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள்”(epidemiological study) பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

ஆய்வுக் காலம் கடந்த 1997 ஜனவரி 1 முதல் 2008 ஏப்ரல் 30 வரை.
10 ஆண்டுகள் நடந்தது இந்த ஆய்வு.
ஆய்வின் முடிவில் அமெரிக்க”உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு” வெளியிட்ட அறிக்கையின் சாரம் கீழே தரப்படுகிறது.

பயோக்ளைடோசோன் மருந்தினை ஓராண்டுக்கு மேலாக உட்கொண்டு வந்தால், சிறுநீரகப் பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன!

நீங்கள் பயோக்ளைடோசோன் உட்கொள்ளும்போது சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பின்வரும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவியுங்கள். சிறுநீரில் ரத்தம் அல்லது சிவப்பு வண்ணத்தில் சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் அவசர உணர்ச்சி, சிறுநீர் கழிக்கும் போது வலி, அடிவயிற்றிலும் அதற்கு பின்புறத்திலும் வலி ஏற்படுதல்.

இது அமெரிக்க அரசின் வெளிப்படையான அறிவிப்பு

பயோக்ளைடோசோன் வாங்கும்போது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கையேட்டினை படித்துப் பாருங்கள். அதில்,இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பயோக்ளைடோசோன் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் அது தொடர்பான கேள்விகளை கேளுங்கள்

இந்த பின்புலத்தில்தான் இந்திய சுகாதார அமைச்சகம் 2013 ஜூலை மாதம் மருந்தை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தடைக்கு எதிராக,மருந்து விற்பனை பெரும் முதலாளிகள் உடன் இணைந்து போர்க்கொடி உயர்த்தியவர்கள் அலோபதி மருத்துவர்கள்.இவர்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள்.*

இதன் விளைவாக, தடை செய்யப்பட்ட பயோக்ளைடோசோன் மறந்து வெறும் 44 நாட்களில், மீண்டும் தடை நீக்கம் செய்யப்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி தடை செய்யப்பட்ட மருந்து, ஜூலை 31 ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப் பட்டு விட்டது.

இந்தத் தடை நீக்கத்தின் போது, அரசு ஒரு நிபந்தனை விதித்தது.”பயோக்ளைடோசோன் உறையின்/பெட்டியின் மீது இந்த மருந்தினால் விலையும் புற்றுநோய் உள்ளிட்ட அவயங்களை அச்சிட வேண்டும்”என்பதுதான் அந்த நிபந்தனை.*

இதற்கு இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதைப் பற்றி அரசுக்கு அச்சங்கம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், “பயோக்ளைடோசோன் உறை/பெட்டி மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடுவது நடைமுறை சாத்தியமில்லாதது.அதற்குப் பதிலாக அந்த எச்சரிக்கை வாசகங்களை ஒரு துண்டுத் தாளில் அச்சிட்டு மருந்து பெட்டியின் உள்ளே செருகி விடுகிறோம்”, என்றது அச்சங்கம்.

நீங்களோ, உங்கள் தாய் தந்தையோ பிள்ளையோ நண்பரோ மனைவியோ கணவரோ பயோக்ளைடோசோன் வாங்கி விழுங்குபவராக இருந்தால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள துண்டு சீட்டை இதுவரை வாசித்து இருக்கிறீர்களா? அந்தச் சீட்டு உங்களுடைய அல்லது உங்கள் உற்றாருடைய மரணத்தை மறைமுகமாக அறிவிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

இப்படி ஒரு துண்டுச்சீட்டு இருப்பதைப் பற்றி உங்கள் நம்பிக்கைக்குரிய அலோபதி மருத்துவர் உங்களிடம் இதுவரை தெரிவித்துள்ளாரா?

இது ஒரு வேதனையான சூழல் என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.

நோய் தீர்க்கும் என நம்பி நம் சமூகம் வாங்கி வாங்கி விழுங்கும் மருந்தின் பெட்டியில் மரண எச்சரிக்கை அச்சிட்டு விற்பனை செய்வதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

சர்க்கரை நோய்க்கு மரபு வழியில் தீர்வு உண்டு என நான் சொல்லும்போது, இந்த அலோபதி காரர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்று உங்களுக்கு புரிகிறதா?

எளிதில் புரிந்து கொள்ள, ஒரு தகவலையும் தருகிறேன். இந்தியாவில், மேற்படி பயோக்ளைடோசோன் மருந்தின் ஆண்டு விற்பனை ஏறத்தாழ 200 கோடி ரூபாய்!

சரி, இந்த மருந்தினால் புற்றுநோய் வந்தால், அதற்கு அலோபதியில் மருந்து உண்டா? என நாம் கேட்டால் அவர்கள் என்ன சொல்லி விடப் போகிறார்கள்.

“எங்களிடமும் அதற்கு மருந்து இல்லை, உலகத்தின் எந்த மரபிலும் அதற்கு மருந்து இல்லை. ஏனென்றால், நாங்கள் நவீன அறிவியல் படித்தவர்கள். நீங்களெல்லாம் பிற்போக்குவாதிகள்.”

எப்படி வேண்டுமானாலும் விவாதம் செய்யலாம், தவறில்லை. 

Whatsapp Us : +91 90425 61651

 Whatsapp Us : +91 9042561651  

 Website : www.tamilnadutherapist.in   

அக்குபஞ்சர் சிகிச்சையில் அக்கு ஊசிக்கு இணையாக பயன்படுத்தும் ஒரு முறை தான்   *மோக்ஸா (MOXA) சிகிச்சை முறை*      நம் உடம்பில் தோன்றும் நோய்களை இரு விதமாக் பிரிக்கலாம் ஒன்று *yin குளிர்ச்சி* மற்றொன்று *yang வெப்பம்    yang= ஊசி* பயன்படுத்துவது போல் *yin குளிர்ச்சி=yin மோக்ஸா (MOXA)* பயன்படுத்தலாம் .      உடம்பில் உள்ள qi & blood (சக்தி& இரத்தம்) செயல்பட & அதிகரிக்க சீனாவில் இச் சிகிச்சை முறை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது     🤰 பெண்களின் தோழியாய் கருதப்படும் இந்த மோக்ஸா பெண்கள் சார்ந்த நோய்களுக்கு  ஒரு வரம் என்றே சொல்லலாம்    உடலில் தோன்றும் மண்ணீரல் சார்ந்த நோய்கள்   சிறுநீரகம் சார்ந்த நோய்கள்  நுரையீரல் சார்ந்த நோய்கள்  தோல்நோய்கள்  முடி கொட்டுதல்  புகைப்பழக்கத்தை கைவிட  நீர் வீக்கம்  உடல் எடை குறைய  பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் பல, நமது உடலில் தோன்றும் அனைத்து வித நோய்களுக்கும் மோக்ஸா சிகிச்சை எவ்வாறு செய்வது?    மோக்ஸா (MOXA) சிகிச்சையின் வகைகள்    எந்தெந்த அக்கு புள்ளிகள் moxa சிகிச்சை அளிக்க கூடாது    மோக்ஸா (MOXA) சிகிச்சையின்போது நாம் கடைபிடிக்க வேண்டியவை    மோக்ஸா (MOXA) சிகிச்சையில் நாம் செய்யக்கூடாதவை    மோக்ஸா (MOXA) சிகிச்சையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள்    மோக்ஸா (MOXA) சிகிச்சையில் உள்ள அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தரப்படும்*